ஜோதிடத்தில் மருத்துவம் : உடலில் உள்ள நவ துவாரம்

மனித உடலில் நவ துவாரங்கள் எனப்படும் ஒன்பது வாசல்கள் அமைந்துள்ளன.

Update: 2018-02-22 22:45 GMT
மது உடலை ‘வெறும் காற்றடைத்த பை’ என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த உடல் என்னும் பொருள் பொய்யானது. உயிர் பிரிந்து விட்டால் உடலானது கெட்டுவிடும். இந்த உடலை நெருப்போ அல்லது மண்ணோ தின்று விடும். நாம் ஆசை ஆசையாய் மகிழ்ந்து மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு வளர்த்த இந்த உடலானது, என்றாவது ஒரு நாள் மண்ணுக்குள் அல்லது தீக்குள் போகுமே என்று எண்ணும் போது, மனித வாழ்க்கை ஒரு வடத்திற்குள் அடங்கியது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மனித உடலில் நவ துவாரங்கள் எனப்படும் ஒன்பது வாசல்கள் அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் காரண காரியத்தோடு அமைந்துள்ளன. நவ துவாரங்களும் நவக்கிரகங்களின் ஆதிக்கம் பெற்றிருக்கின்றன. அதன்படி

வலது கண் - சூரியன் - இரண்டாம் பாவம்

இடது கண் - சந்திரன் - இரண்டாம் பாவம்

வலது மூக்கு - ராகு - மூன்றாம் பாவம்

இடது மூக்கு - கேது - மூன்றாம் பாவம்

வலது காது - புதன் - ஆறாம் பாவம்

இடது காது - செவ்வாய் - ஆறாம் பாவம்

வாய் - குரு - இரண்டாம் பாவம்

இன உறுப்பு - சுக்ரன் - எட்டாம் பாவம்

மலத் துவாரம் - சனி - எட்டாம் பாவம்

நமது உடலில் உள்ள ஒன்பது ஓட்டைகளுக்கும் உரிய கிரகங்கள், பாவங்களை பார்த்தோம். கண்களுக்குரிய துவாரம் சூரியன்- சந்திரன் ஆதிக்கம் பெற்றவை. அதே சமயம் கண் ஒளிக்கு சூரியனும், சுக்ரனும் ஆதிக்கம் செய்கின்றன. சுக்ரன் ஆதிக்கம் அதிகம் கொண்டவர்களுக்கு இடது கண் தெரியாமல் இருக்கும். சூரிய ஆதிக்கம் கொண்டவர்கள் வலது கண் பாதிப்பு இருக்கும்.

அதே போல் மூக்கு மொத்தமும் ஆதிக்கம் செய்யும் கிரகம் சுக்ரன். ஆனால் இங்கு ஓட்டைகள் என்று எடுத்துக் கொண்டு வலது பக்கம், இடது பக்கம் ராகு- கேது ஆதிக்கம் செய்கிறது. காதுகளுக்கு மொத்தமாக புதன் கிரகமே காரணமாக உள்ளார். ஆனால் வலது பக்கம் புதன், இடது பக்கம் செவ்வாய் என்று எடுத்துக்கொள்கிறது. வாய் என்பது ஒரு உறுப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது. உதடுகள், நாக்கு, பற்கள், தாடை போன்ற அனைத்தும் சேர்த்தே குரு ஆதிக்கம் செய்கிறார். மனித இன உறுப்புக்கு முழுவதும் சுக்ரனே ஆதிக்கம் செய்கிறார். ஒரு உயிரை உருவாக்கும் முக்கிய பங்கும் சுக்ரனுக்குச் சேர்கிறது. மலத்துவாரம் சனியின் ஆதிக்கத்தில் உள்ளது. உணவருந்தும் வாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, கழிவை வெளியேற்றும் இன உறுப்பும், மலத் துவாரமும் கூட அதே முக்கியத்துவம் கொண்டவை.

ஒருவரது ஜாதகத்தில் எந்த வகையான பாதிப்புகள் உள்ளதோ, அதற்கு ஏற்ப அந்தந்த அவயங்கள் பாதிப்பு அடைகின்றன. நவ துவாரங்களே தொற்று நோய் உண்டாகி, உடலில் பரவ முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக மூக்கு, வாய், இன உறுப்பு, மலத் துவாரம் இவற்றின் மூலம் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் நம் முடைய உடலில் சென்று விடுகின்றன. பிறகு இந்த கிருமிகள் தன் வேலையைக் காட்டும் போது தான், நோய்கள் நமக்கு வெளியில் தென் படுகிறது. 

மேலும் செய்திகள்