10, 12–ம் வகுப்பில் சாதனை படைத்த ஏழை மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்
10, 12–ம் வகுப்பில் சாதனை படைத்த ஏழை மாணவ– மாணவிகளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிசு வழங்கினார்.;
நெல்லை,
10, 12–ம் வகுப்பில் சாதனை படைத்த ஏழை மாணவ– மாணவிகளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிசு வழங்கினார்.
கண்காட்சி
இந்தியா சிமெண்டு ஆலை நிறுவனம் சார்பில் நெல்லை மாவட்ட அளவில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நெல்லையை அடுத்த சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. கண்காட்சியை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 35 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் கண்காட்சியில் அரங்குகளை வைத்து இருந்தனர். நடுவர்களாக நாராயணன், ஆதிவராக மூர்த்தி, சீதாலட்சுமி ஆகியார் செயல்பட்டு சிறந்த அரங்குகளை தேர்வு செய்தனர். மாலையில் தேர்வு செய்யப்பட்ட அரங்குகளுக்கு பரிசு வழங்கும் விழா, 10, 12–ம் வகுப்பு பொதுதேர்வில் சாதனை படைத்த ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் பரிசு வழங்கினார்
விழாவுக்கு இந்தியா சிமெண்டு ஆலையின் இணை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். ஆலையின் பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி, உதவி பொது மேலாளர்கள் பத்மநாபன், கிருஷ்ணன், தொழிற்சங்க பொதுச்செயலாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பரிசு வழங்கினார். விழாவில் இந்தியா சிமெண்டு ஆலை நிறுவனம் சார்பில் சங்கர்நகர் நகர பஞ்சாயத்துக்கு ரூ.4 லட்சம் செலவில் நவீன கொசு ஒழிப்பு புகை எந்திரம் வழங்கப்பட்டது.
விழாவில் நெல்லை தாசில்தார் கணேசன், சங்கர்நகர் நகர பஞ்சாயத்து சுகாதார அலுவலர் ராஜகணபதி, ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.