தூரந்தோ ரெயிலில் பயங்கர தீ ஒரு பெட்டி எரிந்து நாசம்

புனே ரெயில் நிலையத்தில் தூரந்தோ ரெயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெட்டி எரிந்து நாசம் ஆனது.;

Update:2018-02-24 05:27 IST

புனே,

புனே ரெயில் நிலையத்தில் நேற்று தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மதியம் அந்த ரெயிலின் ஒரு பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 4 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் அந்த பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

தூரந்தோ ரெயில் தீப்பிடித்து எரிந்த இந்த சம்பவம் புனே ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்