போடியில் ஏலக்காய் விலை ‘கிடு, கிடு’ உயர்வு
போடியில் ஏலக்காய் விலை ‘கிடு, கிடு’வென உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.;
போடி,
போடி பகுதியில் ஏராளமான ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி போடி குரங்கணி ரோட்டில் உள்ள இந்திய ஏலக்காய் வாரியத்தில் வாரத்தில் 5 நாட்களும், கேரள மாநிலம் புற்றடியில் 2 நாட்களும் ஏலம் விடப்பட்டு வருகிறது. அதன்படி போடியில் நேற்றுமுன்தினம் ஏலக்காய் ஏலம் விடப்பட்டது.
இந்த ஏலத்தில் அதிக பட்சமாக ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1,400-க்கும், குறைந்தபட்சமாக ரூ.950-க்கும் விற்பனையானது. இந்த விலை அடுத்த சீசன் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த வாரம் ஏலக்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.950-க்கும் குறைந்தபட்சமாக ரூ.850-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோவுக்கு ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து ஏலக்காய் மற்றும் காபி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஞானவேல் கூறியதாவது:-
விவசாயிகளிடம் இருந்து ஏலக்காய் விற்பனை பதிவு மிகவும் குறைந்து வருகிறது. மழை குறைவாக இருப்பதால் விளைச்சலும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஏலக்காய் விலை மேலும் கூடும். அப்போது விற்பனைக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து விவசாயிகள் ஏலக்காயை இருப்பில் வைத்துள்ளனர். மேலும் வெளிநாட்டில் நடைபெறும் அகில உணவு வர்த்தக சந்தையில் இந்திய ஏலக்காய் கொள்முதல் ஆர்டர்கள் நிலவரம் இன்னும் ஏலக்காய் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் தற்போது ஏலக்காய் விலை குறைய வாய்ப்பு இல்லை. மேற்கண்டவாறு அவர் கூறினார்.