இரணியல் அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை

இரணியல் அருகே முன்னாள் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2018-03-28 03:45 IST
அழகியமண்டபம்,

இரணியல் அருகே உள்ள கருப்புகோடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 54), ஆட்டோ டிரைவர். இவருக்கு, மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

காளிதாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லுக்குறி பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்தார்.

அதன்பின்பு, பரசேரி பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந் தார். காளிதாஸ் கடந்த சில நாட்களாக வாழ்க்கையில் வெறுப்புற்று மனமுடைந்து காணப்பட்டார்.

விஷம் குடித்தார்

இந்தநிலையில், நேற்று முன்தினம் காளிதாஸ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக முன்னாள் கவுன்சிலர் காளிதாஸ் தற்கொலை செய்தது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்