சர்க்கரை நோயாளிகளுக்கு சந்தோஷம் தரும் வெந்தயம்

வெந்தயம், அதிலும் குறிப்பாக முளைகட்டிய வெந்தயம், சர்க்கரை நோயாளிகளுக்கு சந்தோஷம் தந்திடும்.

Update: 2018-04-20 22:00 GMT
முளைகட்டிய வெந்தயத்தில் அதிக அளவில் வைட்டமின் சி, புரதம், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்டுகள் உள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. வெந்தயத்தில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிட்டு வந்தால், ரத்தச் சர்க்கரை அளவு குறையும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பைத் துரிதப்படுத்துகிறது.

முளைகட்டிய வெந்தயத்தில் பாலிசாக்கரைடு அதிகமாக இருக்கிறது. அது நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தரும். இதனால் நாம் அதிகப்படியான உணவு உட்கொள்வது தவிர்க்கப்படும். அதோடு முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்து கள் இருக்கின்றன.

இவை ஒரு நாளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் பெறலாம்.

இரவில் ஒரு தூய ஈரத்துணியில் வெந்தயத்தைக் கட்டிவைத்து, காலையில் அவிழ்த்துப் பார்த்தால் அது முளைவிட்டிருக்கும்.

மேலும் செய்திகள்