பள்ளிக்கரணையில் மின்சாரம் தாக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி

மின் வயரில் சிக்கி இறந்த காக்காவை இரும்பு கம்பியால் அகற்ற முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பலியானார்.;

Update:2018-04-21 03:30 IST
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை நாராயணபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வீட்டின் அருகே சென்ற மின்சார வயரில் சிக்கி ஒரு காக்கா இறந்து கிடப்பதை கண்டார்.

உடனே அவர் அந்த காக்காவை அகற்ற முடிவு செய்தார். இதற்காக வீட்டில் கிடந்த ஒரு இரும்பு கம்பியால் மின்சார வயரில் சிக்கிய காக்காவை அகற்ற முயன்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி பலியான ராம்குமாருக்கு திருமணமாகி விட்டது.

இந்த சம்பவம் பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்