சங்கரன்கோவில் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டம்

சங்கரன்கோவில் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2018-04-21 20:30 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பஸ்சை சிறை பிடிக்க முயற்சி 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது சிதம்பராபுரம் கிராமம். குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் 3 பிரிவுகளாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 5 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடிக்க முயன்றனர்.

பேச்சுவார்த்தை 

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில், குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்