வேப்பந்தட்டை கூட்டுறவு சங்க தேர்தல் ஒத்திவைப்பு

வேப்பந்தட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று போட்டியிடாத வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

Update: 2018-04-24 22:30 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று போட்டியிடாத வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்களில் தேர்தலில் போட்டியிடுபவர்களை தவிர மற்றவர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெறுவதற்காக கூட்டுறவு சங்கத்திற்கு வந்தனர். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் யாரும் சங்கத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் எனவும், தேர்தல் அலுவலர்கள் உடனடியாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறி சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் நடத்தினால் தான் இங்கிருந்து செல்வோம் எனக்கூறி சங்கம் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி சமரசம் வேப்பந்தட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். அதற்கான அறிவிப்பு நகலை சங்கத்தின் செயலாளர் நடராஜன் சங்கம் முன்பு ஒட்டிவிட்டு சென்றார். அதனை தொடர்ந்து தி.மு.க. வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்