விவசாயிகளுக்கு வழங்க 50 ஆயிரம் மரக்கன்றுகள் தயார்: வனத்துறை ஏற்பாடு

அந்தியூர் பகுதியில் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

Update: 2018-06-13 23:15 GMT
அந்தியூர்,

தமிழ்நாடு பல் உயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் அந்தியூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட ஊராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட உள்ளது. இதற்காக வனத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வேம்பு, தேக்கு என 30 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்கான நாற்றாங்கால் அந்தியூர் வனத்துறை அலுவலக வளாகத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு எண்ணமங்கலம், மைக்கேல்பாளையம், கெட்டிசமுத்திரம், பிரம்மதேசம் ஆகிய 4 ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாயிகள் 1 ஏக்கருக்கு 200 செடிகள் இலவசமாக பெற்று கொள்ளலாம்.

இதேபோல் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், இலுப்பிலி, கொமராயனூர் ஆகிய 4 ஊராட்சிப்பகுதி விவசாயிகளுக்கு 20 ஆயிரம் மலைவேம்பு மற்றும் தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான நாற்றாங்கால் பாப்பாத்திகாட்டுபுதூர் பகுதியில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள மரக்கன்றுகளை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்