அரும்பருத்தி கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பங்கேற்பு

செய்யாறு தாலுகா அரும்பருத்தி கிராமத்தில் வசிக்கும் நரிகுறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு, 20 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

Update: 2018-07-19 23:00 GMT

செய்யாறு, ஜூலை.20–

செய்யாறு தாலுகா அரும்பருத்தி கிராமத்தில் வசிக்கும் நரிகுறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர்கள் பிரதாப், அன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்துகொண்டு, 20 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பூமாட்டு காலனியில் புதிதாக திறக்கப்பட்ட ஊராட்சி தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு, பள்ளி மாணவர்களிடம் புத்தகத்தை கொடுத்து வாசிக்க செய்தார். பின்னர் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமடைந்த பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சேகர் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு அரசின் நலத்திட்ட உதவியை வழங்கி, அவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டுவதற்கான உத்தரவினை வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்யாறில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மருந்து சேமிப்பு கிடங்கு பணியை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

அப்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் பிரதாப், செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பாணு, அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.மகேந்திரன், எஸ்.திருமூலன், ரமேஷ், பச்சையப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்