மாவட்ட செய்திகள்
ஹாலிவுட் நடிகருக்காக, சொந்த விடுதியில் விளம்பரம் செய்யும் ரசிகன்

சிங்கப்பூரில் இருக்கும் மாரியட் டாங் பிளாசா தங்கும் விடுதியில் வித்தியாசமான கோரிக்கையை வைக்கிறார்கள்.
விடுதியில் தங்குவதற்கு அனுமதி கேட்கும்போதே, தங்கும் அறையின் படுக்கைக்கு அருகே ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படத்தில் நடித்த ஜெப் கோல்ட்ப்ளம் நடிகரின் படம் வைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். அதற்குச் சம்மதிப் பவர்களுக்கே விடுதியை அளிக்கிறார்கள்.

விடுதி அறைக்குள் நுழைந்தவுடன் சுவர், படுக்கை, தொலைக்காட்சி பெட்டி, தலையணை உறை, குளியலறை என்று எங்கு பார்த்தாலும் ஜெப் வெவ்வேறு விதமாகச் சிரித்துக்கொண்டிருக்கிறார்! ‘ஜெப் கோல்ட்ப்ளம் உங்களை வரவேற்கிறார்’ என்ற வரவேற்பு வாசகமும் வைக்கப்பட்டிருக்கும்.

“நான் ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படத்தின் தீவிர ரசிகன். அதிலும் ஜெப் நடிகரின் நடிப்பை விரும்பி பார்ப்பேன். அவர் சிங்கப்பூரில் அந்தளவிற்கு பிரபலமில்லாததால், நான் அவரை பிரபலப்படுத்த ஆரம்பித்தேன். இந்த விஷயம் ஜெப்பிற்கே தெரியாது. அவரது சிறந்த திரைப்படங்கள், அதில் இருக்கும் உயிரோட்டமான நடிப்பு, முகபாவனை போன்றவற்றை புகைப்படமாக்கி, அதை விடுதி முழுக்க நிரப்பியிருக்கிறோம்” என்கிறார் விடுதியின் இயக்குநர்களில் ஒருவரான டேனியல் பர்ஸ்டீன்.