முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி படகுகளில் கருப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்

முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-20 21:45 GMT
புதுச்சேரி, 

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. இதனால் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று வரும் விசைப்படகுகள் தரை தட்டி சேதம் அடைந்து வருகின்றன. எனவே துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், முகத்துவாரத்தில் இருபுறமும் கருங்கற்களை கொட்டி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி தங்களது படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடிகளை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்