வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-09-21 00:09 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் வண்ணப்பா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியரெட்டி, மாவட்ட செயலாளர் நாகராஜரெட்டி, ராஜா, கிழக்கு மாவட்ட செயலாளர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநில துணைத்தலைவர் தோப்பையகவுண்டர் வரவேற்றார். மாநில தலைவர் ராமகவுண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயபால், வரதராஜ், ரவி, மாவட்ட துணைத்தலைவர்கள் பசவன், வேலு, நிர்வாகிகள் கண்ணன், குப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை இல்லாமல் பயிர்கள் கருகிவிட்டன. இதற்கு அரசு கொடுக்கும் இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். கெலவரப்பள்ளி அணையில் இருந்து கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கால்வாய் அமைத்து நீர் நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்