சத்துணவு ஊழியர்கள் கண்டன ஊர்வலம்

பல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஊர்வலம் நடந்தது.

Update: 2018-09-21 22:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு சாப்பிடும் குழந்தைக்கு உணவு மானியமாக 5 ரூபாய் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஊர்வலம் நடந்தது.

 சிவகங்கை கலெக்டர் வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் அரண்மனைவாசலில் நிறைவு பெற்றது. ஊர்வலத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் சீமைச்சாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை மாநில செயலாளர் மலர்விழி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அழகேசன், சாலைப் பணியாளர் சங்க சின்னப்பன் மற்றும் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்