திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் புதிய ஊர் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update:2018-09-23 02:45 IST
திருச்செந்தூர், 

திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் புதிய ஊர் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது ஊர் கமிட்டியின் முன்னாள் பொருளாளரான அரசு பஸ் டிரைவர் மணிமாறன் ரூ.5½ லட்சம் கையாடல் செய்ததாக கூறி, புதிய ஊர் கமிட்டி நிர்வாகிகள், மணிமாறனை மிரட்டியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து மணிமாறன் அளித்த புகாரின்பேரில், ஊர் கமிட்டி நிர்வாகிகள் 13 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே மணிமாறன் அளித்த புகார் பொய் என்றும், அதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஊர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம், உதவி கலெக்டர் கோவிந்தராசு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்