தூய்மை இந்தியாவை வலியுறுத்தி மவுன நாடகம் கல்லூரி மாணவிகள் புதிய சாதனை

தூய்மை இந்தியா கருத்தை வலியுறுத்தி 7 மணிநேரம் தொடர்ச்சியாக மவுன நாடகம் நடத்தி கல்லூரி மாணவிகள் புதிய சாதனை நிகழ்த்தி உள்ளனர்.

Update: 2018-10-01 22:15 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முகம்மது சதக் தஸ்தகிர் கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அப்ரின் வஜிஹா, ஹமீதத் சமீஹா, ஜெயராணி, கவுசல்யா, கார்த்திகா, மீனாலெட்சுமி ஆகியோர் மத்திய அரசின் சிறப்பு திட்டமான தூய்மை இந்திய திட்டத்தினை வலியுறுத்தி புதிய சாதனை படைத்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்ட கருத்தினை வலியுறுத்தி காற்று, நீர், நிலம், இரைச்சல், பிளாஸ்டிக், மரங்கள் ஆகிய தலைப்புகளில் காலை 9.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை 7 மணி நேரம் தொடர்ச்சியாக மவுன நாடகம் நடத்தி புதிய சாதனை படைத்துள்ளனர்.

இவர்களின் இந்த புதிய சாதனையை பாராட்டி வில் உலக சாதனை நிறுவனம் சாதனை சான்றிதழ் வழங்கி உள்ளது. வில் உலக சாதனை ஆராய்ச்சி மையத்தின் தலைவலர் கலைவாணி, செயலாளர் தக்மிதா பானு ஆகியோர் மேற்பார்வையில் மாணவிகள் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் முகம்மது யூசுப், சைடெக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரியாஸ்அகமது, கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்