உடுமலையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்கப்போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நேற்று தொடர் முழக்கப்போராட்டம் நடந்தது.;

Update:2018-10-23 03:30 IST

உடுமலை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். போனஸ் வழங்க வேண்டும், ரிசர்வ் டிரைவர், ரிசர்வ் கண்டக்டர் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் உடுமலையில் பைபாஸ் சாலையில் உள்ள அரசு பஸ் டெப்போ முன்பு நேற்று தொடர் முழக்கப்போராட்டம் நடந்தது.

 போராட்டத்திற்கு சோமசுந்தரம் தலைமை தாங்கினார். விஸ்வநாதன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மேலும் செய்திகள்