விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் உழவர் பேரியக்கம் சார்பில் நடந்தது
விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்கக்கோரி உழவர் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
கும்பகோணம்,
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சங்கர், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் கோபு, ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் ஜோதிராஜ், மேற்கு மாவட்ட தலைவர் முன்னரசு, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட தலைவர்கள் திருஞானம்பிள்ளை, தனவந்தராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடன் வழங்க வேண்டும். கோட்டூர், திருமண்டங்குடி ஆகிய இடங்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பந்தநல்லூரில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் உழவர் பேரியக்க ஒன்றிய தலைவர்கள் துரைராஜ், தங்க அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் வினோத், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உழவர் பேரியக்கம் மேற்கு மாவட்ட செயலாளர் சிங்காரம் நன்றி கூறினார்.