திருநெல்வேலி அருகே உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் தீபக்கொப்பரை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த சாமியார் பொத்தரை கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலிற்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் 4¾ அடி உயரத்தில் செம்பு உலோகத்தால் 120 கிலோ எடையில் தீபக்கொப்பரை தயாரிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-11-16 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் 10–ம் நாள் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த சாமியார் பொத்தரை கிராமத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலிலும் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அங்குள்ள மலையில் மகா தீபம் ஏற்றுவதற்கு தீபக்கொப்பரையை செய்து கொடுக்கும்படி திருவண்ணாமலையில் சூர்யா நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர். அதன்படி ரூ.1½ லட்சம் மதிப்பில் 4¾ அடி உயரத்தில் செம்பு உலோகத்தால் 120 கிலோ எடையில் தீபக்கொப்பரை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த தீபக்கொப்பரை திருவண்ணாமலை மாடவீதி வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் சாமியார் பொத்தரை கோவிலிற்கு தீபக்கொப்பரை அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்