செய்யாறில் மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 1,856 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

Update: 2018-11-17 22:00 GMT
செய்யாறு,

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா செய்யாறில் நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பி.நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் எம்.எஸ்.சுகானந்தம், உமாமகேஸ்வரி வரவேற்றனர்.

இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு 1,856 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நவநீதகிருஷ்ணன் எம்.பி. நிதியில் ரூ.50 லட்சத்தில் கலையரங்கம் அமைக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி, அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.மகேந்திரன், மெய்யப்பன், அரங்கநாதன், கோவிந்தராஜ், தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்