கட்டுமான நிறுவனம் வாடகை பணம் தராததால் விரக்தி: 3-வது மாடியில் இருந்து குதித்தவர் படுகாயம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கட்டுமான நிறுவனம் வாடகை பணம் தராத விரக்தியில் 3-வது மாடியில் இருந்து குதித்தவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-11-20 23:00 GMT
மும்பை, 

கட்டுமான நிறுவனம் வாடகை பணம் தராத விரக்தியில் 3-வது மாடியில் இருந்து குதித்தவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வாடகை பணம்

மும்பை பைகுல்லா மவுலானா ஆசாத் ரோடு பகுதியில் தார்டுதேவ் பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று குடிசை புனரமைப்பு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருகிறது. இதற்காக தங்களது வீடுகளை கொடுத்த குடிசைவாசிகள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு வாடகை பணத்தை கட்டுமான நிறுவனம் வழங்கி வந்தது. இந்தநிலையில், கடந்த சில மாதங்க ளாக அந்த நிறுவனம் வாடகை தொகையை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மாடியில் இருந்து குதித்தார்

இதனால் பாதிக்கப்பட்ட பிரவின்(வயது42) என்பவர் நேற்றுமுன்தினம் கட்டுமான அதிபர்களை சந்தித்து கேட்டார். ஆனால் அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தின் 3-வது மாடிக்கு சென்று திடீரென கீழே குதித்துவிட்டார்.

இதில், அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அக்ரிபாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான நிறுவனம் வாடகை பணம் தராத விரக்தியில் குடிசைவாசி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்