வானவில் : கோடக் ஸ்மார்ட் போன்

புகைப்படம் சார்ந்த கேமராக்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோடக் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த புல்லிட் நிறுவனத்துடன் இணைந்து கோடக் ஐ.எம். 5 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2018-11-21 08:25 GMT
இந்நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட்போனாகும் இது. 5 அங்குல திரை கொண்ட இதில் 13 மெகா பிக்ஸெல் கேமரா எல்.இ.டி. பிளாஷ் லைட்டுடன் பின் பகுதியில் உள்ளது. 

இதில் பிரத்யேக புகைப்பட நிர்வாக சாப்ட்வேர் உள்ளது. அத்துடன் 5 மெகா பிக்ஸெல் முன்புற கேமரா உள்ளது. இதில் 8 ஜிபி உள்ளடு நினைவக வசதியும், இதை 32 ஜிபி வரை விரிவாக்கம் செய்யும் வசதியும் உள்ளது. இதற்கு மைக்ரோ எஸ்டி கார்டு போட்டு நினைவகத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

இது ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 2100 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதில் இரட்டை சிம்கார்டு பயன்படுத்தலாம். வை-பை வசதி எப்.எம். 3 ஜியில் செயல்படக்கூடியது. 

வழக்கமான ஸ்மார்ட்போனில் உள்ளதைப் போன்று கம்பாஸ், மேக்னடோமீட்டர், பிராக்ஸிமிடி சென்சார், ஆக்சிலரோமீட்டர், வெளிச்சம் உணர் சென்சார் ஆகியனவும் இதில் உள்ளன. இதன் விலை ரூ. 4,490 ஆகும்.

மேலும் செய்திகள்