நடனமாடியபடி கைதிகளிடம் விசாரணை நடத்திய விவகாரம்: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை

நடனமாடியபடி கைதிகளிடம் விசாரணை நடத்திய விவகாரத்தில்தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2018-11-21 22:30 GMT
கோலார் தங்கவயல்,

நடனமாடியபடி கைதிகளிடம் விசாரணை நடத்திய விவகாரத்தில்தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய துணைத்தலைவர் நேரில் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடனமாடியபடி விசாரணை

கோலார் தங்கவயல் தாலுகா பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஒன்னேகவுடா. இவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 2 கைதிகளுடன் சேர்ந்து செல்போனில் பாட்டு போட்டு நடனமாடியபடி விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதுதொடர்பாக கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமார் விசாரணை நடத்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒன்னேகவுடாவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே, ஒன்னேகவுடா பாட்டு போட்டு நடனமாடியபடி விசாரணை நடத்திய நபர்கள் ஆதிதிராவிட பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை வேண்டுமென்றே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று ஒன்னேகவுடா தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை

இதுகுறித்து தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலயைில், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய துணைத்தலைவர் எல்.முருகன் என்பவர் நேற்று கோலார் தங்கவயல் தாலுகா பேத்தமங்களா ேபாலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு அவர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அவருடன் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமாரும் இருந்தார். அவரிடம் இருந்து முக்கிய தகவல்களை ஆதிதிராவிடர் நல ஆணைய துணைத்தலைவர் பெற்றுக்கொண்டார்.

அப்போது அவரிடம், ஒன்னேகவுடா தாக்கிய நபரான ராமசாகரா கிராமத்தை சேர்ந்த சிவப்பா என்பவர் புகார் கொடுத்தார். அதில், தன்னையும், தனது தந்தை கிருஷ்ணப்பாவையும் மற்றொரு பிரிவினர் தாக்கினர். இதில் காயமடைந்த நாங்கள் பேத்தமங்களா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். அப்போது அங்கு வந்த ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒன்னேகவுடா, எங்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கினார். அப்போது அவர் சாதி பெயரை கூறி எங்களை திட்டினார் என்று கூறினார்.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்குமார் உத்தரவின்ேபரில் போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் ஒன்னேகவுடா மீது பேத்தமங்களா போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஒன்னேகவுடா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே தங்கவயல் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் மூர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்