பாளையங்கோட்டையில் வருகிற 7-ந்தேதி அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் கலெக்டர் ஷில்பா தகவல்

பாளையங்கோட்டையில் வருகிற 7-ந்தேதி அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறிஉள்ளார்.

Update: 2018-11-22 21:45 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் வருகிற 7-ந்தேதி அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடக்கிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறிஉள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

விளையாட்டு போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை பிரிவு சார்பில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற டிசம்பர் மாதம் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் ஆண், பெண்களுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜை பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. கால்பந்து போட்டி ஆண்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில் அரசு ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் பணியுடன் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அரசு அலுவலர்கள்

எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள் வருகிற 6-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கையொப்பம் பெற்று, தாங்கள் பங்கேற்கும் போட்டிகளின் விவரத்துடன் கூடிய நுழைவு படிவத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பெயர்களை பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு 0462-2572632 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வீரபத்ரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்