போலி ஆவணம் தயாரித்து : தனியார் நிறுவனத்திற்கு ரூ.43¾ லட்சம் நிலம் விற்பனை - 13 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனத்திற்கு ரூ.43¾ லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்த 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-11-28 22:00 GMT
விழுப்புரம், 

வானூர் தாலுகா ஆரோவில்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்குமார் ராமமூர்த்தி. இவர் விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.அந்த மனுவில், ஆரோவில் நிறுவனத்திற்காக இரும்பை கிராமத்தில் 49 ஏக்கரில் நிலம் வாங்கப்பட்டது. இதில் 8 ஏக்கர் 17½ சென்ட் நிலத்தை புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த விஸ்வநாதன், நெல்லித்தோப்பு பழனிவேல், வாசுகி, முருகன், சுபாஷ், லாஸ்பேட்டை அருள், முத்தால், முத்தையால்பேட்டை செந்தில்குமார், திண்டிவனம் பிருந்தா, மூர்த்தி, ஏழுமலை, முருகையன், சடகோபன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து கிரையம் செய்து கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலத்தின் மதிப்பு ரூ.43 லட்சத்து 79 ஆயிரமாகும். எனவே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்த 13 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் விஸ்வநாதன் உள்ளிட்ட 13 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்