அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டர் பறிமுதல்; டிரைவர் கைது தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

அனுமதியின்றி மணல் எடுத்து வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-06 22:15 GMT
குத்தாலம்,

குத்தாலம் அருகே மேக்கிரிமங்கலத்தில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த டிராக்டரில் இருந்த ஒருவர் தப்பியோடினார். பின்னர் டிராக்டரை ஓட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னியநல்லூர் மஞ்சலாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட டிராக்டர் டிரைவர் மேக்கிரிமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த அன்பழகன் மகன் ராஜா (வயது 30) என்பதும், தப்பியோடியவர் சென்னியநல்லூர் கச்சார் மேலத்தெருவை சேர்ந்த மணி மகன் சுபிஷ் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக தப்பியோடிய சுபிசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்