மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கரூர் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அவர்கள், தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.;

Update:2018-12-10 04:00 IST
கரூர்,

அரவக்குறிச்சி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட புஞ்சை காளக்குறிச்சி ஊராட்சி தொக்குப்பட்டி, ராஜபுரம் மற்றும் அரவக்குறிச்சி நகரம் 7, 9-வது வார்டு, வேலம்பாடி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் மற்றும் ஈசநத்தம், க.பரமத்தி வடக்கு ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி கொளந்தபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ், தே.மு.தி.க, தி.மு.க, அ.ம.மு.க உள்பட கட்சியினர் திரளானோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகினர். பின்னர் கரூர் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அவர்கள், தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க.வின் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதில் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்