இ-சேவை மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு சார்பில் கேபிள் டி.வி. நிறுவனம், இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

Update: 2018-12-09 22:45 GMT
மலைக்கோட்டை,

தமிழக அரசு சார்பில் கேபிள் டி.வி. நிறுவனம், இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் தரவு உள்ளட்டாளர்கள்(டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ஒப்பந்த முறையிலேயே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் இ-சேவை மைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த 3 மாதங்களாக சம்பள குறைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே காரணமின்றி பிடிக்கப்பட்ட சம்பளத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும். கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்