சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

Update: 2018-12-21 21:45 GMT
கரூர்,

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பிரகாஷ் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் சிறுபான்மையின மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். கூட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், உலமாக்கள் பணியாளர் நலவாரியத்தின் மூலம் 4 பேருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

இதில் மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் கலாமணி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி குமரேசன், சிறுபான்மையின நல பிரதிநிதிகள் ஜோசப், சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்