காங்கிரஸ் சார்பில் 19 வாரிய தலைவர்கள் நியமனம் மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியை சமாளிக்க நடவடிக்கை

கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் 19 வாரியங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-12-22 23:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் 19 வாரியங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாரிய தலைவர்கள் நியமனம்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான இந்த அரசு பதவியேற்று 7 மாதங்கள் ஆன நிலையில், நேற்று முதல் முறையாக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது.

நேற்று நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் புதிய மந்திரியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். மேலும் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் அவர்களின் அதிருப்தியை சமாளிக்க எம்.எல்.ஏ.க்கள் 19 வாரியங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நரேந்திரா

* கர்நாடக ராணுவ நில வாரிய தலைவர்- சங்கமேஷ்வர், கர்நாடக உணவு மற்றும் பொது வினியோக வாரிய தலைவர்-நரேந்திரா, கர்நாடக வனமேம்பாட்டு வாரிய தலைவர்- நாராயணராவ், கர்நாடக சாலை மேம்பாட்டு வாரிய தலைவர்- வெங்கடரமணய்யா, கர்நாடக மாநில பண்டகசாலை வாரிய தலைவர்- உமேஷ் ஜாதவ்,

ஹட்டி தங்கம் நிறுவன தலைவர்- ரகு மூர்த்தி, கர்நாடக பட்டு தொழில் வாரிய தலைவராக சுப்பாரெட்டி,

முனிரத்னா

* கர்நாடக நகர குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய தலைவர்- யஷ்வந்தராயகவுடா. வி.பட்டீல், கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் தலைவர்-பசவராஜ், கர்நாடக மாநில எலெக்ட்ரானிக்ஸ் மேம்பாட்டு கழகத்தின் தலைவர்- சிவண்ணா, டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் மேம்பாட்டு வாரிய தலைவர்- நாராயணசாமி,

கர்நாடக திறன் மேம்பாட்டு வாரிய தலைவர்- முனிரத்னா, வடமேற்கு போக்குவரத்து கழகத்தின் தலைவர்- சிவராம் ஹெப்பார்,

என்.ஏ.ஹாரீஸ்

* பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைவர்- என்.ஏ.ஹாரீஸ், பெங்களூரு வளர்ச்சி வாரிய தலைவர்- சோமசேகர், கர்நாடக மாநில சிறுதொழில் மேம்பாட்டு கழக தலைவர்- பி.எஸ்.சுரேஷ், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்- கே.சுதாகர், மைசூரு கனிம நிறுவன தலைவர்- லட்சுமி ஹெப்பால்கர், மலநாடு பகுதி மேம்பாட்டு வாரிய தலைவர்-ராஜு கவுடா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்