மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 2 மகளிர் சிறப்பு ரெயில்கள் நாளை மறுநாள் முதல் அறிமுகம்

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 2 மகளிர் சிறப்பு ரெயில்கள் நாளை மறுநாள் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

Update: 2018-12-22 23:00 GMT
மும்பை, 

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் கூடுதலாக 2 மகளிர் சிறப்பு ரெயில்கள் நாளை மறுநாள் முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.

2 மகளிர் சிறப்பு ரெயில்கள்

நாட்டின் நிதி தலைநகரமான மும்பை போக்குவரத்திற்கு மின்சார ரெயில்கள் உயிர்நாடியாக இருக்கிறது. இதில் தினந்தோறும் 80 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிக்காக ரெயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதில், பெண் பயணிகளின் வசதிக்காக 8 மகளிர் சிறப்பு ரெயில்கள் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் தற்போது வரை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கூடுதலாக 2 புதிய மகளிர் சிறப்பு ரெயில்கள் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதனால் மகளிர் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை 10 ஆக உயரும்.

ஸ்லோ வழித்தடத்தில்...

மேலும் இந்த 2 மகளிர் சிறப்பு ரெயில்களும் ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதில் காலை 9.06 மணிக்கு பயந்தரில் இருந்து புறப்படும் ரெயில் காலை 10.30 மணிக்கு சர்ச்கேட் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

இதேபோல் வசாய் ரோட்டில் இருந்து காலை 10.04 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 11.30 மணிக்கு சர்ச்கேட் ரெயில் நிலையம் வந்து சேரும்.

இதுகுறித்து மேற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த சிறப்பு ரெயில்கள் அறிமுகமாவதன் மூலம் பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும்’ என்றார்.

மேலும் செய்திகள்