பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நன்னிலத்தில் நடந்தது.;

Update:2019-01-08 04:00 IST
நன்னிலம்,

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், விலையில்லாசைக்கிள் ஆகியவைகளை உடன் வழங்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரி சுர்ஜித், மாவட்ட துணை செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்