பொங்கல் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

பொங்கல்பண்டிகையையொட்டி கொடைக் கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

Update: 2019-01-16 23:15 GMT
கொடைக்கானல்,

தைப்பொங்கல், மாட்டுப் பொங்கலை யொட்டி தமிழகத் தில் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் தங்கி வேலை செய்பவர்களும், மாணவ- மாணவிகளும் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கலை கொண்டாடி வருகின்றனர். ஒருசிலர் சுற்றுலா தலங்களுக்கு தங்கள் குடும்பத்துடன் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படு வதையொட்டி பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுப்பார்கள். அந்த வகையில் ‘மலைகளின் இளவரசி’யான கொடைக் கானலில் கடந்த சில நாட் களாகவே சுற்றுலா பயணி களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இன்றும் காலை முதலே கார், வேன் என ஏராளமான வாகனங் களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இவர்கள் நட்சத்திர ஏரியில் படகுசவாரி, ஏரியை சுற்றிலும் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் கோக்கர்ஸ்வாக், குணா குகை, பைன் மரக்காடு, மோயர்பாயிண்ட் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகளின் வருகை அதி கரிப்பால் பல்வேறு பகுதி களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். சுற்றுலா பயணிகளின் தொடர் வருகை காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்