மாணவி கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மாணவி கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;

Update:2019-01-31 03:45 IST
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பெரியமஞ்சவாடி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ்-1 படித்து வந்த 17-வயது மாணவியை கடத்தி சென்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். இந்த கடத்தல் வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் உமாமகேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் விக்னேசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி(கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்