பெற்றோர், சகோதரர் இறந்த சோகத்தில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பெற்றோர், சகோதரர் இறந்த சோகத்தில் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-13 23:00 GMT

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தோப்பு கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 17). இவர் கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவரது தாய், தந்தை இறந்த நிலையில் கடந்த மாதம் அண்ணனும் இறந்து போனார். உறவினர்களை இழந்த சோகத்தில் மாணவர் காந்தி மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காந்தி வந்தார். ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் நோக்கி சென்ற அவர், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

காந்தியின் உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் கவரைப்பேட்டை ரெயில் நிலையம் அருகே கிளிக்கோடியை சேர்ந்த 8–ம் வகுப்பு மாணவன் முகேஷ்(14). என்பவர் இதே பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு பள்ளி மாணவர் தற்போது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்