வானவில் : சோனியின் ஏ6400 மிரர்லெஸ் கேமரா

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் சோனி நிறுவனம் புகைப்படக் கலைஞர்களின் வசதிக்காக மிரர்லெஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2019-02-20 11:08 GMT
சோனி ஏ6400 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. இது 24 மெகா பிக்ஸெல்லை கொண்டது. இதில் செயற்கை தொழில்நுட்பம் (ஏ.ஐ.) பின்பற்றப்பட்டுள்ளது.

இதனால் படமெடுக்க வேண்டிய பொருளின் தன்மைக்கேற்ப இது தானாகவே போகஸ் செய்யும். 425 விதமான பிம்பங்கள், காட்சிகள், பொருள்கள் இந்த ஏ.ஐ. நுட்பத்தில் புகுத்தப்பட்டுள்ளன. அசையும் பொருள் என்றால் ஒரு விதமாகவும் இதன் லென்ஸை போகஸ் செய்யும். உலகிலேயே அதிக வேகமான ஷட்டர் வேகம் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்கிறது சோனி நிறுவனம். இதன் பின்பகுதியில் உள்ள தொடுதிரை எந்த கோணத்திலும் திருப்பும் வசதி கொண்டது.

இது வீடியோ பிளாக்கர்களுக்கு மிகவும் வசதியான அம்சமாகும். இதன் விலை ரூ.63,900. லென்ஸுடன் இணைந்து வாங்கினால் அதன் விலை ரூ.95,900 ஆகும். இதில் உள்ள கேமரா கண் தொடர்ந்து செயல்படும்.

அதாவது மனித கண்கள் பொருள்களைப் பார்ப்பது போல இதை ஆன் செய்தவுடன் எதிர்ப்படும் பொருட்கள், உருவங்களை ஆராயும். குறிப்பிட்ட பிரேமுக்குள் அடங்கும் வகையில் இது போகஸ் செய்யும். புகைப்படத்தை பொழுதுபோக்காக தொடங்கி தொழில் பழகுபவர்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்பட பதிவாக்க விரும்பினால் அவர்களுக்கு நிச்சயம் இந்த கேமரா உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகள்