தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வக்கீல்கள் உள்பட 5 பேருக்கு சிறை சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வக்கீல்கள் உள்பட 5 பேருக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2019-02-20 19:42 GMT
சென்னை,

சென்னை அடையார் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன். தொழிலாளி. குடிசைமாற்று வாரியம் வழங்கிய இடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு இவர், வீடு கட்டும் பணியை மேற்கொண்டார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த துளசிராமன் (வயது 36). சுரேஷ் என்ற முனிகுட்டி(34)(இவர்கள் இருவரும் வக்கீல்கள் ஆவர்), பிரவின்குமார் (37), வேல்முருகன் (41), அடையாறு தாமோதரபுரம் சத்யா (47) ஆகியோர் கட்டுமானத்தை இடித்துவிட்டு முன்பகுதியில் உள்ள நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயராமன், அவரது மகன் மணிகண்டன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் ஜெயராமன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் அசோகன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி, குற்றம்சாட்டப்பட்ட துளசிராமன் உள்பட 5 பேருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்