வேளாங்கண்ணியில் கிறிஸ்தவர்கள் மாநாடு

வேளாங்கண்ணியில் கிறிஸ்தவர்கள் மாநாடு நடைபெற்றது.

Update: 2019-03-17 22:30 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் தஞ்சை மறை மாவட்டம் சார்பில் கிறிஸ்தவர்களுக்கான அன்பிய பணிக்குழு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ஊட்டியை சேர்ந்த மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் தஞ்சை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அன்பிய பணிக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

இந்த அன்பிய மாநாட்டின் மூலம் ஒவ்வொரு பங்குகளும் மேன்மை அடைவதற்காகவும், மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்துவதற்காகவும் கிறிஸ்துவினுடைய கோட்பாடுகளை மற்றவர்களிடத்தில் எடுத்து கூறவும் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

ஊர்வலம்

பின்னர் பணிக்குழு சார்பில் ஊர்வலம் நடை பெற்றது. இந்த ஊர்வலத்தை ஊட்டியை சேர்ந்த மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் மற்றும் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாதா பேராலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், சர்ச் சாலை வழியாக சென்று மாதா குளத்தை அடைந்தது.

இதில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்