நெல் வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

குளித்தலை அருகே வாகன சோதனையில் நெல் வியாபாரியிடம் இருந்து ரூ.1½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2019-03-18 23:00 GMT
குளித்தலை,

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறும் என கடந்த 10-ந் தேதி அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை நிறுத்தி அதிகாரிகள் அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த திருச்சி மாவட்டம் பழூர் காந்திநகரை சேர்ந்த சந்திரகுமார் (வயது 29) என்பவர் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, அவர் நெல் விற்ற பணம் என்று கூறியுள்ளார். இருப்பினும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்திற்கான ஆவணங் களும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்