பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2019-03-20 04:30 IST
தஞ்சாவூர்,

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், மாதர் சங்கத்தினர். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்திலும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை செயலாளர் பிடல்காஸ்ட்ரோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்