பரமத்தி வேலூர் அருகே 2 லாரிகளில் கொண்டு வந்த ரூ.11 லட்சம் பறிமுதல்

பரமத்தி வேலூர் அருகே 2 லாரிகளில் கொண்டு வந்த ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-19 22:45 GMT
பரமத்திவேலூர்,

பரமத்தி வேலூர் காவிரி பாலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே தேர்தல் பிரிவு பறக்கும்படை அலுவலர் செங்கோடன் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரளாவில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த ஒரு லாரியை நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியில் வந்த கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணன் (வயது 32) என்பவரிடம் ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 870 இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கேரளாவில் முட்டைகளை இறக்கிவிட்டு பணத்துடன் நாமக்கல் வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல அதே பகுதியில் மற்றொரு லாரியில் வந்த நாமக்கல் மாவட்டம் பொட்டணம் பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை லாரி டிரைவர் அசோகனிடம் இருந்து ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 கோழிப்பண்ணை லாரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 870-ஐ பறக்கும்படை அதிகாரிகள் உதவி தேர்தல் அலுவலர் தேவிகா ராணியிடம் ஒப்படைத்தனர். பின்னர் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை உதவி தேர்தல் அலுவலரிடம் காண்பித்து பணத்தை திரும்ப பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்