‘எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை’ - ராதாகிருஷ்ண விகே பாட்டீல் விளக்கம்

எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என ராதாகிருஷ்ண விகே பாட்டீல் விளக்கம் அளித்து உள்ளார்.

Update: 2019-03-19 22:56 GMT
மும்பை,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இவரது மகன் டாக்டர் சுஜய் விகே பாட்டீல் காங்கிரஸ் சார்பில் அகமதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

எதிா்க்கட்சி தலைவரின் மகனே பா.ஜனதாவில் சேர்ந்தது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகனை கூட எதிர்க்கட்சி தலைவரால் சமரசம் செய்ய முடியவில்லையா என விமர்சனங்களும் எழுந்தன.

இந்தநிலையில் நேற்று ராதாகிருஷ்ண விகே பாட்டீல் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

இது குறித்து அவர் கூறுகையில், நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை மறுக்கிறேன், என்றார்.

பா.ஜனதாவில் சுஜய் விகே பாட்டீல் இணைந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். நான் தொடர்ந்து காங்கிரசில் பணியாற்றுவேன் என ஏற்கனவே ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்