100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-02 22:30 GMT
அரியலூர்,

இந்திய தேர்தல் ஆணையம் வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் மக்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டம், கருவிடைச்சேரி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி புரியும் நபர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி ஆகியவைகள் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உதவி திட்ட அலுவலர் (ஊரக வளர்ச்சி முகமை) நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலை யரசன் மற்றும் அலுவலர்கள், உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்