வீட்டில் கஞ்சா பதுக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

வீட்டில் கஞ்சா பதுக்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-04-16 22:15 GMT
சென்னை,

சென்னை மெரினா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் சுந்தரவடிவேலு. இவர், கடந்த 2017-ம் ஆண்டு கோட்டை போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தபோது, போர் நினைவு சின்னம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது ஆட்டோவில் கடத்தி வந்த 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை சுந்தரவடிவேலு, சென்னை ராயபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்ததாக புகார் கூறப்பட்டது. இதன்பேரில் அப்போது அவர் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சுந்தரவடிவேலு, மெரினா போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். அவர் மீது இலாகா பூர்வ விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்குப்பிறகு நேற்று முன்தினம் அவரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்