கூவம் திரிபுராந்தகசாமி கோவிலில் தேரோட்டம்

கூவம் திரிபுராந்தகசாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.

Update: 2019-04-16 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் கிராமத்தில் உள்ளது பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சாமி கோவில். இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் கூவம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை தக்கார் சண்முகமுதலியார், செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் விழாக்குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூரில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. ஆட்சீஸ்வரர் பார்வதி அம்மையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், கோவில் நிர்வாகத்தினர், அச்சரப்பாக்கம் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்