வானவில் : கட்டிட வேலை செய்யும் ரோபோ

இந்த காலத்தில் கட்டிட வேலை போன்ற பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

Update: 2019-04-17 12:24 GMT
இதனை கருத்தில் கொண்டு ஜப்பானின் தேசிய ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகள் மனிதர்களை போல இயங்கவும் கடினமான வேலைகளை செய்யவும் ஒரு ஹுமனாய்டு ரோபோவை உருவாக்கியுள்ளனர். HRP 5P என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ 182 அடி உயரமும், 101 கிலோ எடையும் கொண்டது. கப்பல் கட்டுமானம், விமானம் உருவாக்குவது போன்ற பணிகளிலும் பெரிய கட்டிடங்களை கட்டவும் இவை பயன்படும்.

பெரிய கட்டைகளை எடுத்து ஸ்க்ரூ செய்வது போன்ற வேலைகளை தானியங்கியாகவே செய்து முடிக்கிறது. அளவு எடுப்பது, சரியான அளவில் பொருத்துவது, கட்டுமான பொருட்களை அடையாளம் கண்டு சரியாக பயன்படுத்துவது என்று செயல்திறனில் நம்மை வியக்க வைக்கிறது இந்த ரோபோ. முதல் முறையாக இவ்வளவு உறுதியான அமைப்புடன் அதே சமயம், திறம்பட செயல்படக் கூடிய ஒரு தரமான ரோபோவை உருவாக்கியுள்ளதை பெருமையுடன் கூறுகின்றனர் இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள்.

மனிதர்கள் செய்யமுடியாத அசாத்தியமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிகிறது இந்த HRP ரோபோ. ஆட்களே இல்லாமல் ஒரு முழு கட்டிடத்தையும் கட்டி முடித்து விடும். ஆட்கள் தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்கு இது மிகவும் பயன்படும் என்கின்றனர்.

மேலும் செய்திகள்