குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-04-18 21:45 GMT
குலசேகரன்பட்டினம், 

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வருசாபிஷேக விழா

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது.

காலை 11 மணி அளவில் கோவில் விமான கலசங்களுக்கும், சுவாமி-அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி, வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

அம்மன் தேர் பவனி

மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் தேரில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், கட்டளைதாரர் சலவையாளர், கலா தசரா குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்