ராமநாதபுரம் தொகுதியில் 68.21 சதவீத வாக்குகள் பதிவு பரமக்குடி தொகுதி இடைத்தேர்தலில் 70.74 சதவீதம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 68.21 சதவீதமும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 70.74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

Update: 2019-04-18 23:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை 1,916 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. 22 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

38 வாக்குச்சாவடிகளில் எந்திர கோளாறு காரணமாக மாற்று எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடந்தது. நேற்று 6 மணி நிலவரப்படி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற மொகுதிககளில் மொத்தம் 68.21 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்கு பதிவு சதவீதம் வருமாறு:- பரமக்குடி-70.74, திருவாடானை- 65.71, ராமநாதபுரம்-67.06, முதுகுளத்தூர்-63.90, அறந்தாங்கி-68.87,திருச்சுழி-72.98. வாக்களித்த ஆண்கள்-63.50, பெண்கள்-72.18, மூன்றாம் பாலினத்தினர்-4.88. பரமக்குடி சட்ட மன்ற தொகுதி இடைத்தேர்தலில் 70.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு முடிந்து மின்னணு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு பாதுகாப்பாக ராமநாதபுரம் அண்ணா என்ஜினீயரிங் கல்லூரி வளாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்