ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலியால் பரபரப்பு பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று திடீரென அபாய மணி ஒலித்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் பதற்றம் அடைந்து, அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

Update: 2019-04-30 23:00 GMT
சென்னை,

ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து ஒளித்திரைகளிலும் “தீ பரவும் வாய்ப்பு உள்ளதால், பயணிகள் உடனடியாக நிலையத்தை விட்டு வெளியேறவும்” என்ற வாசகம் வெளியிடப்பட்டது. மேலும் ஒலிபெருக்கியிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வந்த ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

மேலும் ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்களில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும், எசுபிளனேடு போலீசாரும் விரைந்து வந்து சோதனை செய்தனர். சோதனையில் பயணி ஒருவர் ஆர்வம் தாங்காமல் எச்சரிக்கை அபாய பொத்தானை அழுத்தியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

மேலும் செய்திகள்